Asianet News TamilAsianet News Tamil

எத்தனை முறை பிரதமர் தமிழகம் வந்தாலும் பாஜக டெபாசிட் வாங்க முடியாது.. அமைச்சர் சேகர்பாபு.!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள தங்கசாலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். 

No matter how many times PM comes to Tamil Nadu BJP cannot buy deposits.. Minister Sekarbabu
Author
First Published Mar 5, 2024, 1:41 PM IST

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சென்னை புயல், மழை வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள தங்கசாலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்கு தமிழ்நாடு வருகிறார். பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார். 

No matter how many times PM comes to Tamil Nadu BJP cannot buy deposits.. Minister Sekarbabu

பிரதமர் மோடியின் தமிழக வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாஜகவை தமிழகத்தில் தக்க வைத்துக்கொள்ளவும் திமுகவை பார்த்தும்தான் அவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. எத்தனை முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தாலும் பாஜக டெபாசிட் கூட பெற முடியாது. 

இதையும் படிங்க: குற்றம் கூறுவதற்காகவே ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை செயல்படுகிறார்- சீறும் சேகர்பாபு

No matter how many times PM comes to Tamil Nadu BJP cannot buy deposits.. Minister Sekarbabu

நிவாரண நிதியாக தற்போது வரை சல்லி காசு கூட தராமல் வஞ்சிக்கும் பிரதமரை தமிழக மக்கள் வஞ்சிக்க தயாராகிவிட்டனர். உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு தோல் கொடுப்போம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios