மத்திய அமைச்சர்கள் எத்தனை முறை தமிழகத்திற்கு படை எடுத்தாலும் அது நடக்காது - வைகோ
மத்திய அமைச்சர்கள் எத்தனை முறை தமிழகத்திற்கு படை எடுத்தாலும் தமிழகத்தில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக நிர்வாகிகள் உடன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை செயலாளர் துறை வைகோ துணைப் பொதுச் செயலாளர் மணலை சத்யா உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மறுமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஆளுநரை திரும்ப பெறக்கோரி நேற்று துவங்கிய கையெழுத்து இயக்கம் அடுத்த மாதம் 20 ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மீண்டும் மத்தியில் மோடி அரசு வராத அளவுக்கு ஒரு சூழல் உருவாகி உள்ளதாகவும், இந்தியா முழுவதும் எதிர்ப்பு அலை உருவாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டு நடுங்கிக் கொண்டு இருக்கிறார் - சி.வி.சண்முகம் விமர்சனம்
தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 நாடளுமன்ற தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று தெரிவித்த அவர் மத்திய அமைச்சர்கள் எத்தனை முறை தமிழகத்திற்கு படை எடுத்தாலும் தமிழகத்தில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாது என கூறினார்.
செந்தில் பாலாஜி விவகாரதில் அமலாக்கத் துறை மனிதபிமான தோடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார். ஆளுநர் தமிழகத்திற்க்கு ஒரு கேடு என்றும் அவர் மீது உள்ள எதிர்ப்பை காட்டுவதற்க்கு ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசுதலைவரிடம் வழங்க உள்ளதாக கூறினார்.
தமிழக அமைச்சர்களுக்கு குடும்ப வேலையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை - ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு