No long leave for railway employees

ரயில்வே ஊழியர்கள் காரணம் இல்லாமல் நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்தால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் ஒரே பொதுத்துறை நிறுவனம் இந்தியன் ரயில்வே துறை ஆகும். பல லட்சம் ஊழியர்கள் ரயில்வே துறையில் பணியாற்றுகிறார்கள்.

இந்த நிலையில் ரெயில்வேயில் பணியாற்றும் 13 லட்சம் ஊழியர்களில் 13,000க்கும் அதிகமான ஊழியர்கள் நீண்டகாலமாக விடுப்பில் சென்று இருப்பதை ரெயில்வே நிர்வாகம் அண்மையில் கண்டறிந்துள்ளது. 

நீண்ட காலம் விடுப்பில் இருக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அதில் காரணமின்றி நீண்டகால விடுப்பில் இருக்கும் ரெயில்வே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே ஊழியர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான காரணம் இல்லாமல் 13,000க்கும் அதிகமான ஊழியர்கள் நீண்டகால விடுப்பில் இருப்பதால் ரயில்வே அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.