Asianet News TamilAsianet News Tamil

எந்த மொழியும் திணிக்கப்படாது... டி.ஆர்.பாலுவிடம் மத்திய அமைச்சர் விளக்கம்..!

நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம். எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என மத்திய அமைச்சர் திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவிடம் விளக்கியுள்ளார்.

No language will be imposed ... Union Minister's explanation to TR Balu
Author
Delhi, First Published Aug 11, 2020, 6:00 PM IST

நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம். எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என மத்திய அமைச்சர் திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவிடம் விளக்கியுள்ளார்.

மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய இந்த குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.No language will be imposed ... Union Minister's explanation to TR Balu

இதுகுறித்து திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். இந்த சந்த்திப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பதிவில், ‘’புதிய கல்வி கொள்கை குறித்த கோரிக்கை மனுவை தி.மு.க தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின்  சார்பாக T.R.பாலுஜி அவர்கள் என்னிடம் சமர்ப்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை விளக்கினேன்.

 

மேலும் T.R பாலுஜி அவர்களிடம், பயிற்று மொழியை தெரிவு செய்துகொள்வது அந்தந்த மாநிலங்களின் உரிமை என்பதையும் மற்றும் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவரிடம் விளக்கினேன். நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம்’’ எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios