அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்ப விழாவில் பங்கேற்று மொய் செய்யவிலை என்பதால் கடும் டார்ச்சருக்கு ஆளான மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கிறிஸ்டி தெபோராள் தனது பதவியை ராஜினாமா செய்தள்ளார்

மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில்  அரசு  வழக்கறிஞராக பணி புரிந்து வந்தவர் வக்கீல் கிறிஸ்டி தெபோராள். இவர் திடீரென்று அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு பெண்கள் உள்பட 100 பேருடன், மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய கிறிஸ்டி தெபோரா,  கடந்த 2011 முதல் மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு வக்கீலாக , நேர்மையாக, சிறப்பாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு என்னை நேர்மையாக செயல்பட விடாமல் அமைச்சர் செல்லூர் ராஜூ பல்வேறு நெருக்கடி கொடுத்தார். என்றும் அவர் சுய ஆதாயம் அடையும் நோக்குடன் எனக்கு விளைவித்த இடையூறுகளை தாங்க முடியாததால், மன வேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார்.அண்மையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின்  பேரன்களுக்கு காது குத்தும் குடும்ப விழா மதுரை பாண்டிகோயிலில் நடந்தது. அதற்கு தான்  மொய் செய்யவில்லை என்றும்  அதனால் தன் மீது  அவருக்கு கோபம் அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பணி செய்யவிமாமல் அமைச்சர்  செல்லுர் ராஜு டார்ச்சர் தருவதாகவும் அதனால் தனது அரசு வழக்கறிஞர்  பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவுத் கிருஸ்டி தெபோராள் தெரிவித்தார்.