கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தை கையிலெடுத்த காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் பினராயி விஜயன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்துள்ளது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 15மதிப்புள்ள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னாசுரேஷ் சிக்கினார்.இந்த செய்தி உலகம் முழுவதும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கடத்தல் சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விவகாரத்தில் முதல்வரின் முதன்மை செயலர் சிவசங்கரன் சஸ்பென்ட் செய்யப்பபட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தின் முதன்மைச்செயலாளர் தங்கம் கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என காங். விமர்சித்துள்ளது.இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இந்நிலையில், நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக, கேரள சட்டசபை, வரும், 27ல் கூடுகிறது. அன்றைய தினம், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது.இது குறித்து, கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசும் போது.. "முதல்வரின் முதன்மை செயலர், தங்கக் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.இது, தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் பினராயி விஜயன், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக,நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, காங்., எம்.எல்.ஏ., சதீசன், 'நோட்டீஸ்' வழங்கியுள்ளார்.