No chance to BJP and congress in tamilnadu

தமிழகத்தைப் பொருத்தவரை 1960 களில் இருந்து திராவிட கட்சிகள்தான் கோலோச்சி வருவதாகவும், இங்கு சேகிய கட்களுக்கு கொஞ்சமூம் இடமில்லை என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு குழப்பங்களுக்கிடையே தமிழகத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக இந்த அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மிகக்கடுமையாக எதிர்த்த உணவு பாதுகாப்புத் சட்டம், உதய் மின் திட்டம். நீட் தேர்வு போன்றவற்றை எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. இதனால் மத்திய அரசுக்கு பயந்து மாநில அரசு செயல்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வேப்பேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் ஆலோசித்த பின்னர்தான் , முடிவுகளை அறிவிப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 1967-ல் இருந்து திராவிட கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் முற்றிலும் இடமில்லை என்றும், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். என்றும் ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் நிதிநிலைமை மோசமாக உள்ளது என்றும், மற்ற மாநிலங்களை காட்டிலும் இங்கு மாநிலத்தில் வரி குறைவாக தான் வசூலிக்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும் ஒரே சம்பளம் பெறும் நிலை ஏற்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆணையம் இதுவரை என்னை ஆஜராக சொல்லவில்லை என்றும் அவர்கள் அழைத்தால் அங்கு செல்ல தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.