Asianet News TamilAsianet News Tamil

கையில் காசு இல்லை..! முன்னாள் அமைச்சர்கள் தலைமறைவு..! மாவட்டச் செயலாளர்கள் தப்பி ஓட்டம்..!

அதிமுக மேலிடம் கேட்ட போது ஏதேதோ காரணத்தை கூறி மாவட்டச் செயலாளர்கள் மழுப்புவதாகவும், சிலர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு காரணம் தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட செலவு தான் என்று கூறப்படுகிறது. மறுபடியும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் என அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலும் தேர்தல் நேரத்தில் பணத்தை வாரி இறைத்துள்ளனர். 

No cash on hand ..! Former ministers disappear ..! District secretaries flee
Author
Tamil Nadu, First Published Jun 2, 2021, 10:30 AM IST

கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ள நிலையில் மக்களுக்கு ஆங்காங்கே உதவி செய்யுமாறு அதிமுக மேலிடம் உத்தரவிட்ட நிலையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுகவின் செயல்பாடு அரசியல் களத்தில் சுணக்கமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது கடமை முடிந்துவிட்டதாக கருதி நின்று கொள்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரோ தினசரி அறிக்கை என்பதோடு அவ்வப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தும் சில கருத்துகளை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் இருவர் தவிர அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யாரும் பெரிய அளவில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

No cash on hand ..! Former ministers disappear ..! District secretaries flee

முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றோர் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் மனுக்களை கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்துவிட்டு செல்கின்றனர். ஆனால் தமிழக அரசு மீதோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதோ அவர்களின் விமர்சனம் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. செல்லூர் ராஜூ மட்டுமே முதலமைச்சரின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கிறார். மற்ற முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலும் ஸ்டாலின் நடவடிக்கைகளை பாராட்டும் வகையிலும் பேசுவதை பார்க்க முடிகிறது.

No cash on hand ..! Former ministers disappear ..! District secretaries flee

இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். மளிகை கடைகள், காய்கறிக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுக இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது திமுக சார்பில் ஒன்றினைவோம் வா என்கிற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவிகள் வழங்கப்பட்டன.

இதே பாணியில் அதிமுக சார்பிலும் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் போன்றோரிடம் அதிமுக மேலிடத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. தினமும் கிராம அளவில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அப்போது அவர்களிடம் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் எந்த மாவட்டத்திலும்அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கும் பணி துவங்கவில்லை என்கிறார்கள்.

No cash on hand ..! Former ministers disappear ..! District secretaries flee

இது குறித்து அதிமுக மேலிடம் கேட்ட போது ஏதேதோ காரணத்தை கூறி மாவட்டச் செயலாளர்கள் மழுப்புவதாகவும், சிலர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு காரணம் தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட செலவு தான் என்று கூறப்படுகிறது. மறுபடியும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் என அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலும் தேர்தல் நேரத்தில் பணத்தை வாரி இறைத்துள்ளனர். ஆனால் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இதன் பிறகு செலவு செய்த பலரை அதிமுக மேலிடம் கண்டுகொள்ளவில் என்கிறார்கள்.

இதனால் தான் கையில் தற்போது பணப்புழக்கம் குறைந்துவிட்டதாக கூறி நலத்திட்ட உதவிகள் விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் தள்ளி நிற்பதாக கூறப்படுகிறது. ஆனால் பத்து வருடங்களுக்காக ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்களாக பத்து வருடங்கள் இருந்தவர்களிடம் கூடவா காசு இருக்காது? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios