நூறு மோடிகள் வந்தாலும் கர்நாடக மாநிலம் கலபுரகி தொகுதியில் என்னை அசைக்க முடியாது என்ற நாடாளுமன்ற காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலம் கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , என்னை பற்றி பொய் பேசினால் இங்குள்ள மக்கள் நம்பமாட்டார்கள் என்று பிரதமர் மோடிக்கு தெரியும். அதனால் அவர் என்னை பற்றி கலபுரகியில் பேசவில்லை. மல்லிகார்ஜுன கார்கே என்று சொன்னவுடன் மக்களின் காதுகளில் வளர்ச்சி என்ற சொல்லே விழுகிறது என கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கலபுரகிக்கு வந்த பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் இந்த கலபுரகி மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு பணியை செய்திருப்பாரா?. என்ன செய்தார் என்று அவர் பேசி இருக்க வேண்டும். ஏதாவது செய்திருந்தால் தானே பேச முடியும்
.
ரெயில்வே கோட்ட அலுவலகம், வெளிவட்டச்சாலை, விமான நிலையம் உள்பட பல்வேறு அமைப்புகளை நாங்கள் கலபுரகிற்கு கொண்டு வந்தோம். கலபுரகி தொகுதி வளர்ச்சி பணிகள் தொடர்பான திட்டங்களுக்கு அனுமதி கிடைக்காமல் அப்படியே கிடப்பில் உள்ளன.

எனக்கு வயதாகிவிட்டது. இதுவே எனக்கு கடைசி தேர்தல் என்று பலர் பேசிக்கொள்கிறார்கள். நான் பிறவியிலேயே போராட்டக்காரன். இது எனக்கு கடைசி தேர்தல் அல்ல. என்னை தோற்கடிக்க மோடி உள்பட பலரும் சதி செய்கிறார்கள்.

ஆனால் என்னை வெற்றி பெற வைப்பதோ அல்லது தோற்கடிக்க வைப்பதோ இந்த தொகுதி மக்களின் கைகளில் தான் உள்ளது. அது மோடி கையில் இல்லை. 100 மோடிகள் வந்தாலும், என்னை அசைக்க முடியாது என மல்லிகார்ஜுன கார்கே சவால் விட்டுள்ளார்.