டெல்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கான அடிக் கல்லை நாட்டினார்.

அப்போது பேசிய அவர்,  உலக மொத்த மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை 17.5 சதவீதமாக உள்ளது. ஆனால் உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம் தான். 

எனவே மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு குறைவான இயற்கை வளங்களே உள்ளன. இந்த சமமற்ற நிலையை நிறைவு செய்ய நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

.ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அனைத்து பயன் பாடுகளுக்கும் ஒரே அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை நாம் ஏன் கொண்டுவரக் கூடாது? என கேள்வி எழுப்பினார்.

அனைத்து தகவல்களையும் ஒரு அட்டையில் கொண்டுவருவதற்கான திட்டம் தேவை. இது சாத்தியமானதுதான். இதற்கு மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கு விவரம் தயாராக இருப்பது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

இது குறித்து விரைவில் முடிவு செய்து அனைத்துக்கும் ஒரே கார்டு என்ற திட்டம் செய்லபடுத்தப்படும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.