என்.எல்.சி.யால் 1,000 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்துள்ளது... கவலை தெரிவித்த அன்புமணி ராமதாஸ்!!
என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்ட மக்கள் மூன்று தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்ட மக்கள் மூன்று தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.எல்.சி.கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. ஆனால் நானாகவே மக்கள் பிரதிநிதியாக கலந்துகொண்டேன். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. தேவை இல்லை என விரிவான கடிதம் கொடுத்துள்ளேன். என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்ட மக்கள் மூன்று தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகைக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..ஓ! இதுதான் காரணமா?
என்.எல்.சி. நிர்வாகம் 66 ஆண்டுகளாக கடலூரில் இயங்கிவருகிறது. என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சியில் கடைசியாக 1989க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நிரந்தர பணி ஆணை வழங்கப்பட்டது. அதற்கு பின் யாருக்கும் நிரந்தர பணி வழங்கவில்லை. 8 அடியில் இருந்த நீர்மட்டம், என்.எல்.சி-யால் சுமார் 1000 அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: மே 7-9 வரை 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்... அறிவித்தது திமுக!!
என்.எல்.சிக்கு எதிராக பாமக நடைபயணம், கடையடைப்பு, போராட்டம், பொதுக்கூட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றம் நிறைவடைந்த பிறகு என்.எல்.சிக்கு நிலம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தும் கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.