மே 7-9 வரை 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்... அறிவித்தது திமுக!!
தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் சம்மதித்தால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர தயார் - புகழேந்தி பேட்டி
இந்த நிலையில், அரசு ஊழியர் - ஆசிரியர் - மாணவர் - மகளிர் மகளிர் - கழனியில் பாடுபடும் உழவர் - ஆலையில் உழைக்கும் தொழிலாளி மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் கழக அரசின் - சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும், கழக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகைக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..ஓ! இதுதான் காரணமா?
தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் 2023 மே 7,8,9 ஆகிய தேதிகளில் 1,222 இடங்களில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கண்டோன்மென்ட் நகரில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.