நிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..!
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி மேற்கொள்ள வசதியாக 10 மர அறுவை இயந்திரங்கள், 3 டிப்பர் லாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் வாகனம் ஒன்று, 50 பெரிய கட்டுமார்கள், 25 கிலோ எடையுள்ள 50 மூட்டை பிளிச்சிங் பவுடர், 50 மழை கோட்டுகள், 50 ஒளிரும் சட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் மதுரை மாநகராட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் தந்து கொண்டிருக்கும் பாதிப்புகளைக் கண்டு இப்போதைய நேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் போதெல்லாம் முதலில் ஓடோடி வந்து உதவி செய்யக்கூடியவர்கள் மதுரைக்காரர்கள்.மதுரைக்காரர்கள் வீரத்தில் மட்டுமல்ல மனிதாபிமானத்திலும் மற்றவர்கள் மீது அன்பு செலுவத்துவதிலும் முதலில் வந்து களத்தில் குதிப்பவர்கள் என்பதை ஒவ்வொரு சூழலிலும் நிருபித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்னை மக்களை காப்பாற்ற மதுரைக்காரர்கள் களத்தில் இறங்கப் புறப்பட்டுவிட்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை ஒட்டி கரையைக் கடக்க உள்ள நிவர் புயல் எதிரொலியாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நிவர் புயல் விளைவாக ஏற்பட்ட மழையின் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்ற மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 30 தூய்மை பணியாளர்கள், 30 மின் உதவியாளர்கள் என மொத்தம் 60 பேரை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் அரசுப் பேருந்துகளில் ஏறல்லறி அனுப்பி வைத்தார்.