நிவர் புயல் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும்  மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.  

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நாளை  கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது. ஆகையால், புயரை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. . ஒருவாரத்திற்கு தேவையான உணவு பொருட்களை இருப்பு வைக்கவும், மருந்து மாத்திரைகளை கைவசம் வைக்கவிம்,   தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விழுப்புரம், நானை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணிமுதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

 

 

புயல் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில்;- நிவர்' புயல் தொடர்பான சூழ்நிலை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.