இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் எனவும், மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும்  பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மது விலக்கு அமல்படுத்தப்படவில்லை. மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கிடைக்கும் மிகப்பெரிய வருவாய் தான் மாநிலங்களின் பட்ஜெட்டையே நிர்ணயிக்கின்றன.  தமிழகத்தைப் பொறுத்தவரை அரகே மதுக் கடைகளை நடத்தி வருகின்றன.

அஇதே நேரத்தில் நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றமும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கூட்டம் உன்றில் பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,  நாடு முதுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றோ, மது விற்பனைக்கு எதிராக போராட்டங்களுக்கு ஏன் காங்., மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளிப்பதில்லை என கேள்வி எழுப்பினார்.

.குஜராத்திலும், பீகாரும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போது, ஏன் நாடு முழுவதும் கொண்டு வர முடியாது? எனவும் அவர் வினா எழுப்பினார்.

அனைத்து மதங்களும் மது அருந்துவதை எதிர்க்கின்றன. பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் அதனை அனைத்து மதங்களும் வரவேற்கும். அது மிகப் பெரிய விஷயமாக அமையும். மதுவிற்கு தடை விதித்தால் குற்ற எண்ணிக்கைகள், சாலை விபத்துக்கள், பல்வேறு நோய்கள் குறையும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.