சமீபத்தில் பஜகவில் சேர்ந்தாலும் குறுகிய காலத்தில் தமிழிசை சவுந்தரராஜனின் கட்சிக்கான அர்ப்பணிப்பு அளப்பரியது. தமிழகத்தில் அவரது காலடித்தடம் பதியாத பகுதிகளே இல்லை. அதேபோன்றவர்தான் வானதி சீனிவாசனும். போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் என எப்போதும் பாஜகவுக்காகவே கட்சிக்கு அப்பாற்பட்டும் இயங்கி வருபவர்கள்.

  

அதேபோல இல.கணேசன், ஹெச்.ராஜா, லட்சுமணன் போன்றவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு உட்பட்டு ஆரம்பம் தொட்டே இயங்கி வருபவர்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பதவி நிர்மலா சீத்தாராமனுக்கு எந்தத் தகுதியும் இல்லாமல் கிடைத்திருக்கிறது.  

மன்மோகன் சிங், சசிதரூர் போன்றவர்கள் நிதியமைச்சராக இருந்துள்ளார்கள். பொருளாதாரத்தில் அவர்களெல்லாம் இந்தியாவை தாண்டி பல்வேறு நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தவர்கள். வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பொருளாதார சிறப்பு வகுப்பு பாடம் நடத்தியவர்கள். சுப்ரமணியன் சுவாமி ஹார்டுவேர்டு யுனிவர்சியிட்டியில் சிறப்பு பேராசியர். ஆனால், இப்போது நிதியமைச்சராகி உள்ள நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி என்ன தெரியும்? 

டெல்லி ஜே.என் யுனிவர்சிட்டியில் படித்ததை தவிர வேறு எந்தத் தகுதியும் நிர்மலாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கும் ஒரே தகுதி மோடியின் விசுவாசி. சிறந்த தகவல் தொடர்பாளர். அதைத்தவிர அபரிதமான திறமையில்லை. கடுமையான உழைப்பும் இல்லை. மக்களவை சந்திக்காமல் இருமுறை ராஜ்யசபா மூலம் தேர்வு செய்யப்பட்டு இருமுறையும் மத்திய அமைச்சரவையின் முக்கியப்பதவியை அலங்கரித்து வருகிறார் நிர்மலா சீதாராமன். 

இதில் எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் ஆளும், எதிர்கட்சிக்கு எதிராக இதுவரை எந்த ஒரு போராட்டத்திலும் நிர்மலா சீதாராமன் பங்கு கொண்டதே இல்லை. இவர் நிதியமைச்சராக இருந்து எதைச் சாதிக்கப்போகிறார் என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்? இதில் இன்னொரு கொடுமையும் அடங்கி இருக்கிறது. இந்திராகாந்திக்கு அடுத்து பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி அமைச்சராக பொறுப்பேற்கும் இரண்டாவது பெண்மணி என்கிற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்