பிசிராந்தையாரை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேசி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிசிராந்தையாரின் புறநானூறு பாடலை முன்னுதாரணமாக எடுத்துக் கூறி பேசினார்.

யானை புகுந்த நிலம் என்ற அறிவுரையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வழங்கினார் பிசிராந்தையார். யானை புகுந்த நிலம் போல என்ற பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா அந்தப் பாடலை பாடினார். காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும் என்கிற பாடலை பாடினார். பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் அறிவுரை வழங்கிய அந்தப்பாடலை தமிழில் முன்னுதாரணமாக எடுத்துக்கூறி யானை புகுந்த நிலம் எப்படி பாதிக்கப்படும் என அவர் எடுத்துரைத்தார்.

திடீரென தமிழ் இலக்கணப்பாடலை பேசியதால் தமிழ எம்.பி.க்கள் மகிழ்சி அடைந்தனர். குறிப்பாக திமுக எம்.பிகளின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. அப்போது அவர்கள் கைதட்டி நிர்மலா சீதாரமனுக்கு பாராட்டுத் தெரிவித்தனர். அடுத்து அந்த முன்னுதார பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னபோது பாஜக எம்.பிக்கள் கைதட்டி பாராட்டினர்.