மத்திய நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சியை பூர்விகமாக கொண்ட ஜெய்சங்கருக்கு வெளியுவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2014-ல் மக்களவைத் தேர்தலில் மறைந்த மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டது. இதையடுத்து கோவா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அந்த பதவியை நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் நாட்டின் 2-வது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பதவியேற்ற பாஜக அரசில் நிர்மலாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே உடல்நிலையை காரணம் காட்டி, புதிய அமைச்சரவையில் தமக்கு இடம் வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து இந்தியாவை பொருளாதாரரீதியாக முழுவீச்சில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சர் பொறுப்புக்கு மோடியின் மனசாட்சியாகவும், அவரின் எண்ணத்தை அப்படியே செயல்படுத்தும் திறமைமிக்கவராக துணிச்சலான மற்றும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒருவராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து சுதந்திர இந்தியாவில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அடுத்து நிதியமைச்சராக 2-வது பெண்மணி என்ற பெயரை பெற்றுள்ளார்.