Asianet News TamilAsianet News Tamil

அதிமுக எம்.பிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட நிர்மலா சீத்தாராமன்... ராகுல் குற்றச்சாட்டின் பகீர் பின்னணி..!

ரஃபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் என் கேள்விக்கு பதில் அளிக்கப் பயந்து கொண்டு மோடி அவர் அறையில் பதுங்குகிறார், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வெளுத்து வாங்கினார்.

Nirmala hiding his admk mp's as this debate is happening lok sahba rahul
Author
India, First Published Jan 3, 2019, 11:11 AM IST

ரஃபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் என் கேள்விக்கு பதில் அளிக்கப் பயந்து கொண்டு மோடி அவர் அறையில் பதுங்குகிறார், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வெளுத்து வாங்கினார்.Nirmala hiding his admk mp's as this debate is happening lok sahba rahul

மக்களவை தொடங்கியதில் இருந்தே அதிமுக, காங்கிரஸ், தெலங்குதேசம் கட்சி ஆகிய எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், பலமுறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போது பேசிய ராகுல் காந்தி 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்களை மட்டும் அவசரமாக தருமாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டை ஆரம்பித்து மக்களவையை குலுங்க வைத்தார். ’’நான் பேசும்போது அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு தொந்தரவு செய்து, பிரதமர் மோடியைப் பாதுகாக்கிறார்கள். ரஃபேல் ஒப்பந்தத்தில் அவசரமாக 36 விமானங்கள் தேவைப்படுகிறது என்று கூறினீர்கள். சரி, அந்த 36 விமானங்கள் எங்கே இருக்கிறது. புதிதாகப் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தமே விதிமுறைகளை மீறிப் போடப்பட்டது.

ரஃபேல் விவகாரத்தில் 3 கேள்விகள்தான் நாங்கள் கேட்கிறோம். முதலாவது எப்படி ஒப்பந்தம் போடப்பட்டது, விலை எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது, மூன்றாவது யாருக்கு ஆதரவானது என்பதுதான். தொடக்கத்தில் இருந்து இந்த 3 கேள்விகளைத்தான் பிரதமரிடம் நாங்கள் கேட்டு வருகிறோம்.முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், இந்த ஒப்பந்தம் குறித்து ஏதும் தெரியாது என்கிறார். 2-வது விலை ரஃபேல் விமானத்தில் விலை ஏன் ரூ.536 கோடியில் இருந்து ரூ.1600யாக உயர்ந்தது. புதிய விலைக்குப் பாதுகாப்பு துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது உண்மையில்லையா?Nirmala hiding his admk mp's as this debate is happening lok sahba rahul

மூன்றாவதாக ரபேல் ஒப்பந்தம் பைசாவுக்காகவா அல்லது யாருக்கேனும் ஆதரவு அளிக்கவா?. இந்துஸ்தான ஏரோனாட்டிக்கல் நிறுவனம் பல ஆண்டுகளாக விமானங்களைத் தயாரித்து வருகிறது. ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆனால், அனில் அம்பானி தோல்வி அடைந்த, நஷ்டமடைந்த தொழிலதிபர். ஏன் பிரதமர் மோடி தனது அன்பு நண்பருக்கு ஒப்பந்தத்தை அதிகமான விலையில் அளிக்கிறார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. கடந்த முறை நான் பேசியபோது அதற்குப் பதில் அளிக்க பிரதமர் மோடி வந்திருந்தார். ஊடகத்துக்கு ஒன்றை மணிநேரம் நேர்காணல் அளிக்கும் பிரதமர் மோடி, ரஃபேர் விவகாரத்தில் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில்லை. என் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் துணிச்சல் இல்லாமல், அறையில் பதுங்குகிறார் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்.Nirmala hiding his admk mp's as this debate is happening lok sahba rahul

ரஃபேல் போர்விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் தன்னுடைய படுக்கை அறையில் இருப்பதாகக் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆடியோ பதிவை போடலாமா?’’ என கேட்டார். அதற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்து விட்டார். மீண்டும் தொடர்ந்த அவர், ‘’போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்கக் கூடாது என்றோ, நாடாளுமன்றம் விசாரணை நடத்தக்கூடாது என்றோ கூறவில்லை. ரஃபேல் ஒப்பந்தத்தில் உண்மையை அறிய வேண்டும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை. உண்மை வெளிவர வேண்டும்’’ என அவர் தெரிவித்தார். 

அதிமுக எம்பிகளின் பின்னால் நிர்மலா சீத்தாராமன் ஒளிந்து கொண்டுள்ளதாக ராகுல் கூறிய குற்றச்சாட்டின் பகீர் பின்னணி வெளியாகி இருக்கிறது. ’’இந்த விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பக்கூடும் என்பதால், அதிமுக நிர்வாகிகளான அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியை சந்தித்த நிர்மலா சீத்தாராமன் ரஃபேல் விவகாரம் எழுப்பப்படும்போது அதிமுக எம்.பிக்கள் வேறு கோரிக்கைகளை முன் வைத்து கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக டெல்லியில் பேச்சுகள் கிளம்பியுள்ளன. அதனை மனதில் வைத்தே அதிமுக பின்னால் நிர்மலா சீத்தாராமன் ஒழிந்து கொண்டுள்ளதாக ராகுல் காந்தி பேசினார்’’ என்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios