கல்லூரி மாணவிகளை பாலியல் பேரம் பேசி தவறான வழிகாட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்டார் கணித துறை பேராசிரியர் நிர்மலா தேவி.                                             

இதனை விசாரிக்க மாநில அரசு சார்பில் சிபிசிஐடி காவல்துறையும் ஆளுநர் அமைத்த சந்தானம் தலைமையிலான குழுவும் மதுரை பல்கலைகழக்த்திலும் நிர்மலாதேவி வேலை பார்த்த அருப்புக்கோட்டை தேவாங்கா கலை கல்லூரியையும் விசாரித்தது.

மேலும் நிர்மலா தேவியின் வீட்டையும் சோதனையிட்டு அதற்கு சீல் வைத்த்து சிபிசிஐடி காவல்துறை. இந்நிலையில் நேற்று முந்தினம் வீட்டின் பூட்டு உடைபட்டிருப்பதை நிர்மலாதேவியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்தார். ஆவணங்கள் ஏதும் திருடப்பட்டதா அல்லது நகை பணத்துக்கான கொள்ளை முயற்சியா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்த்து நிர்மலாதேவியின் வழக்கறிஞர் அவர் பேசிய ஆடியோவில் பாலியல் பேரத்துக்கான நேரடியான எந்த வார்த்தையும் பேசவில்லை பொதுவாகத்தான் பேசியுள்ளார் எனத் தன் தரப்பு வாதத்தை வைத்தார்

.

இதற்கு அரசு வழக்கறிஞர் ஆடியோ விசாரணைக்கு கைது செய்யப்பட்ட போதும் அவரின் கைப்பேசி மற்றும் வாட்ஸ் அப் உரையாடல்கள் யாவும் பாலியல் பேரத்தை உறுதி செய்வதாக கூறி சாட்சியங்களை காட்டினார். இதனை கருத்தில் கொண்டு ஸ்ரீவில்லி புத்தூர் நீதிமன்றம் நிர்மலாதேவி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.