Asianet News TamilAsianet News Tamil

நிர்மலா தேவி விவகாரம்… வசமாக சிக்கும் 3 அமைச்சர்கள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள்….. அதிர்ச்சியில் தமிழக அரசு….

Nirmala devi issue contact with 3 ministers and 5 IAS officers
Nirmala devi issue contact with 3 ministers and 5 IAS officers
Author
First Published Apr 22, 2018, 7:23 AM IST


கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி சிபிசிஐடி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நிர்மலா கூறியிருப்பது கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸ் எஸ்பி ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை போலீசாருக்கு தற்போது ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Nirmala devi issue contact with 3 ministers and 5 IAS officers

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் குறித்து, உயர்கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு கடந்த ஒரு மாதமே புகார் சென்றுள்ளது. மதுரையிலுள்ள பேராசிரியர்கள் சிலர் கூட்டாக இந்த விபரங்களை அறிக்கையாக எழுதி அனுப்பினர்.

Nirmala devi issue contact with 3 ministers and 5 IAS officers

இந்த அறிக்கையை வாங்கிய அதிகாரிகள், இது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.. அதோடு இல்லாமல் இந்த விவகாரத்தை அப்படியே கவர்னரின் செயலாளர் ராஜகோபாலிடம் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நிர்மலா தேவியின் மொபைல் போனில் 3 அமைச்சர்கள், 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், உயர்கல்வித்துறையில் வேலை செய்து வரும் முக்கியமான அதிகாரிகள் தொடர்பு எண்கள் மற்றும் போட்டோகள், சாட்டிங் செய்த மெஜேஜ்கள், வாட்ஸ் அப் கால் பட்டியல் என பல்வேறு முக்கியமான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

Nirmala devi issue contact with 3 ministers and 5 IAS officers

அதே நேரத்தில்  விசாரணையை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அரசின் உத்தரவிற்க்காக காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், நிர்மலா மீது மாணவிகள் புகார் கொடுத்த பிறகுதான், கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. நிர்மலாவை சஸ்பெண்ட் செய்த நேரத்தில் அவர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சியில் இருந்தார்.

இந்த விபரம் அவருக்கு தெரிவிக்கப்பட்டதும் நிர்மலா ஓடிச்சென்று பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புலம்பி இருக்கிறார்.

Nirmala devi issue contact with 3 ministers and 5 IAS officers

அவர்கள் உடனடியாக இந்த தகவலை துணைவேந்தரிடம் கொண்டு சென்றுள்ளனர். இதனால் அப்செட் ஆன துணைவேந்தர், பதிவாளரிடம் இந்த பிரச்னையை முடித்து வைக்கச் சொல்லி கூறியுள்ளார்.

உடனடியாக தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்திற்கு பதிவாளர் சின்னையா நிர்மலா மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம், அவரது சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுமாறு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தை வாங்கிய தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கா விட்டால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் நீதிமன்றம் செல்வார்கள் ஆகையால் தற்போது பிரச்னை ஓயும் வரை அவர் கொஞ்சம் ரெஸ்ட்டில் இருக்கட்டும் என சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

Nirmala devi issue contact with 3 ministers and 5 IAS officers

பாதிக்கப்பட்ட நான்கு பெண்களில் 2 பேர் கல்லூரி நிர்வாகத்திற்கு நெருக்கமான மாணவிகள். மேலும் ஒருவர் தலித் மாணவி என்பதால் தற்போது இந்த விசாரணையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆனையமும் விசாரணையில் இறங்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Nirmala devi issue contact with 3 ministers and 5 IAS officers

நிர்மலாவிற்கு பல்கலைக்கழக வட்டாரத்தில் தொடர்பு கிடைக்காத போது அவர் பல்வேறு நபர்களிடம் நெருக்கமான பழகி வந்துள்ளார். இதற்கு முன்பே அவர் பல்வேறு மாணவிகளை பல்வேறு முக்கிய நபர்களுக்கு விருந்தாக்கியதும் விசாரனையில் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் கிடைத்த பணத்தை வங்கி மற்றும் நிலத்தில் முதலீடு செய்த நிர்மலா துணைவேந்தர் ஆக பின்னாளில் பணம் தேவைப்படும் என்பதால் சேமித்து வைத்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.  3 அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழக அரசு கடும் அதிச்ச் அடைந்துள்ளது,

Follow Us:
Download App:
  • android
  • ios