Asianet News TamilAsianet News Tamil

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

Nirmala Devi affair Why the Governor ordered the investigation? MK Stalin question
Nirmala Devi affair: Why the Governor ordered the investigation? MK Stalin question
Author
First Published Apr 17, 2018, 12:16 PM IST


கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டதில் குழப்பம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோடடையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் உயர் அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நிர்மலாதேவியின் வற்புறுத்தினாலும், அந்த மாணவிகள் அதனை மறுத்தனர். பேராசிரியை மாணவிகள் பேச்சு அடங்கிய ஆடியோ, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

இதனை அடுத்து, கல்லூரி முன்பு மாணவர்களின் பெற்றோர்களும், மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது.

கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவி மீது போலீசில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில், நிர்மலா தேவியின் போலீசார் சென்றனர். அப்போது நிர்மலா தேவி உட்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டினுள் இருந்துள்ளார். 5 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருந்த நிர்மலா தேவியை, போலீசார் வீட்டின் பூட்டை  உடைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி வேண்டும் என்று கோரிக்கையை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புதோகித்
விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டதில் குழப்பம் இருப்பதாக கூறியுள்ளார். 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து, துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், திடீரென ஆளுநர் பன்வாரிலால் விசாரணைக்கு உத்தரவிட்டதில் குழப்பம் உள்ளதாக கூறினார். மேலும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்பது எனது கருத்து என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios