Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் உங்களுக்கு கோமாளித்தனமா இல்ல... முதல்வர் மீது கோபத்தில் கொந்தளித்த ஆ. ராசா!

கண் துடைப்புக்காக வந்து சென்ற ஓ.பி.எஸ். சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடிவடைவே இல்லை. ஆனால், 200 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்குத் தேவை என துணை முதல்வர் முடிவுக்கு வந்தது கோமாளித்தனமான செயல்.
 

Nilagiri mp a. raja attacked cm edappadi palanisamy
Author
Nilgiris, First Published Aug 16, 2019, 10:24 PM IST

தமிழக முதல்வர் மேட்டூருக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நீலகிரியில் ஏற்பட்ட சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல்  மக்களை எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தி உள்ளார் என்று நீலகிரி தொகுதி எம்.பி. ஆ. ராசா தெரிவித்துள்ளார். 

Nilagiri mp a. raja attacked cm edappadi palanisamy
நீலகிரியில் கொட்டித் தீர்த்த மிகக் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான மண்சரிவும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அத்தொகுதியில் எம்.பி. ஆ. ராசா ஆய்வில் ஈடுபட்டார். அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் ஆ.ராசா வழங்கினார். பின்னர் ஆ. ராசா செய்தியாளர்களிடம் பேசினார்.Nilagiri mp a. raja attacked cm edappadi palanisamy
 “நீலகிரியில் மிகப்பெரிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு  நிவாரண நிதியும் வழங்கினார். கண் துடைப்புக்காக வந்து சென்ற ஓ.பி.எஸ். சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடிவடைவே இல்லை. ஆனால், 200 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்குத் தேவை என துணை முதல்வர் முடிவுக்கு வந்தது கோமாளித்தனமான செயல்.

Nilagiri mp a. raja attacked cm edappadi palanisamy
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலினை முதல்வர் விமர்சித்தது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல். முதல்வராகவே இருக்க தகுதி அற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கேரளாவிலும் கர்நாடகவிலும் மழை வெள்ள சேதங்களை மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்கள். தமிழக முதல்வரோ மேட்டூருக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நீலகிரியில் ஏற்பட்ட சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல்  மக்களைக் கொச்சைப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.” என்று ஆ. ராசா தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios