அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் எந்தக் கட்சியிலும் இணைய விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசி அவர், ’’எந்தக் கட்சியிலும் சேர நான் விருப்பம் தெரிவிக்கவில்லை. யாரும் என்னிடம் அணுகவும் இல்லை. டி.டி.வி.தினகரன் பண்பாடற்றவர். என்னைப்பற்றி ஆடியோ, வீடியோ அனுப்புவது தினகரனின் தலைமை பண்புக்கு சரியல்ல. கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத டி.டி.வி.தினகரனுக்கு மூன்று நாமம் தான் கிடைக்கும். கொள்கை இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து என்ன பயன்? அமமுக கூடாரம் கலையுமா என்பது தொண்டர்களின் கையில்தான் உள்ளது. அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது’’ என அவர் தெரிவித்துள்ளார்.