Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவுக்குள் அடுத்த குடைச்சல்... எம்.பி.,சீட் கொடுக்காததால் ஆத்திரம்..!

பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா? என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
 

Next lap inside the AIADMK ... MP, not giving a seat, rage
Author
Tamil Nadu, First Published Jul 27, 2019, 5:00 PM IST

பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா? என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Next lap inside the AIADMK ... MP, not giving a seat, rage

மூன்று முறை ராஜ்யசபா எம்.பி பதவி வகித்த தனக்கு மீண்டும் பதவி வழங்கவில்லை என அதிமுகவுக்கு எதிராக போர்கொடி தூக்கி வருகிறார் மைத்ரேயன். இது தொடர்பாக ஊடகங்களில் அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் அது குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயகுமார், ’’ பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா? பொறுப்பில் இல்லை என்றவுடன் கட்சியையும், கட்சியில் இருப்பவர்களையும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல’’ எனத் தெரிவித்தார்.Next lap inside the AIADMK ... MP, not giving a seat, rage
  மேலும் அவர், ’தமிழ் மொழியைப் போன்ற தொன்மையான மொழி எதுவும் கிடையாது. 12-ம்  வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எலக்ட்ரானிக், பேட்டரி கார்களுக்கு 5 சதவிகிதமாக  வரியை குறைக்க கோரிக்கை வைத்தோம். 61 பொருட்களுக்கு வரி குறைப்பு, வரி விலக்கிற்கான கோரிக்கை வைத்துள்ளோம்’’ என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios