புதுச்சேரியில் எப்படியும் பாஜக கூட்டணி அமைந்துவிடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியின் அலுவலகத்தில் ஆட்சிக்கான கவுண்ட் டவுனை தொடங்கியுள்ளனர் பாஜகவினர்.  

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் எப்படியும் பாஜக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் பாஜகவினர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதிலும் பாஜக உறுதியாக உள்ளது. எனவே. தேர்தல் பணிகளை அக்கட்சி முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் அறிக்கை, வாக்கு சேகரிப்பு, பாஜக தலைவர்களின் பிரச்சாரம் புதுச்சேரியில் பாஜகவினர் பம்பரமாய் சுழன்றுவருகின்றனர். 
இந்நிலையில் எல்லைபிள்ளைச் சாவடியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் தரை தளத்தில் தேர்தல் அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கே தினந்தோறும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வந்தவண்ணம் உள்ளானர். இப்படி கட்சி கட்சி அலுவலகம் வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்த நோட்டீஸ் போர்டில் கவுண்ட் டவுனை பாஜகவினர் எழுத தொடங்கியுள்ளனர். பாஜக கூட்டணி ஆட்சி அமைய என தினமும் கவுண்ட் டவுனை எழுதுகிறார்கள். அந்த அளவுக்கு புதுச்சேரியில் அடுத்து பாஜக கூட்டணி ஆட்சி என்பதில் அக்கட்சியினர் உறுதியாக உள்ளனர்.