மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘’நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன். வழக்கு போடுபவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்து வைத்துள்ளேன். வன்முறைக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பதும் அகிம்சைதான்.

வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும். இல்லையெனில் செத்து மடிய வேண்டியதுதான். அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்தால் வீட்டுக்கு ஒரு கார் வழங்க போகிறேன்'’ என சீமான் பேசினார்.  கடந்த தேர்தல்களில் இலவத்தை ஒழிப்பேன்.  இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கையை திராவிட கட்சிகளால் தர முடியுமா? என கேட்டு வந்த சீமான்.

 

இந்நிலையில் வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளாதாக சீமான் கூறியதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.