ஓராண்டல்ல,  இரண்டாண்டல்ல நூறு ஆண்டுகள் ஆனாலும் ஜெயலிதாவின் கனவு படி அதிமுகவே தமிழகத்தை ஆட்சி செய்யும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார் .   மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒரு முறை ஆக்ரோஷமாக பேசுயபோது,  அதிமுக என்ற இந்த இயக்கம்,   எனக்கு பின்னால் ( எனது மறைவுக்கு பின்னரும்)   இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என கூறியிருந்தார் .  அவரின் அப்பேச்சை மேற்கோள்காட்டிய முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ,   இன்னும் நூறுஆண்டுகள் ஆனாலும்  அதிமுகவே தமிழகத்தை ஆட்சி செய்யும் என தெரிவித்துள்ளார். 

அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவரின் இந்த பேச்சு  எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னையில் இலக்கிய அணி சார்பில் அதிமுக பேச்சாளர்களுக்கு  பயிற்சிப்பட்டறை அதாவது சொல்வோம் வெல்வோம் என்ற நிகழ்ச்சி இன்று  தொடங்கியது ,  இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இந் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது :-   அதிமுக ஆட்சி இதோ கலைய போகிறது அது கலையை போகிறது என எதிர்க்கட்சிகள் வாய்ஜாலம்காட்டிவந்தனர்

ஆனால் நான்கு ஆண்டுகளை கடந்து  ஆட்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.  மொத்தத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு படி இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அதிமுகவே ஆட்சி செய்யும் .  2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அம்மாவின் கனவை நனவாக்குவோம் .  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்யும் பொய் பிரச்சாரத்தை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும் என அவர் கூறினார் .இந்நிகழ்ச்சியில்  அரசின் சாதனைகளை எடுத்துரைக்க அதிமுக பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .