தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் நியூஸ் ஜெ என்ற புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஒளிபரப்பை தொடங்கி வைத்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்காக செயல்பட்டு வந்த ஜெயா டிவி, டிடிவி தினகரன் ஆதரவாக மாறியது. இதே போல் நமது எம்.ஜிஆர் நாளிதழும் தினகரன் கைவசம் சென்றது. இதையடுத்து இபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் அதிமுகவுக்கென நமது அம்மா என்ற நாளிதழ் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் அதிமுகவுக்கென புதிய தொலைக்காட்சி ஒன்றும் நிறுவப்பட்டது. இதன் ஒளிபரப்பு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் எம்.ஜி.ஆர்.. ஜெயலதா ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்பந்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை அவ்கள் இருவரும் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கண் கவர் கலை சிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அமைச்சர்க்ள, எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.