புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சூழலைப் பொறுத்து இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முயலுங்கள். இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்கலாம். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கலாம். உருமாறிய கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 30, 2020, 6:58 PM IST