Asianet News TamilAsianet News Tamil

புதிய  குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த்  இன்று பதவியேற்பு …டெல்லியில் கோலாகலம்…

new president ramnath govinth today swarnin
new president ramnath govinth today swarnin
Author
First Published Jul 25, 2017, 6:26 AM IST


புதிய  குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த்  இன்று பதவியேற்பு …டெல்லியில் கோலாகலம்…

குடியரசுத் தலைவர் இன்றுடன் திரு. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைந்த  நிலையில், நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக திரு.ராம்நாத் கோவிந்த் இன்று  பதவியேற்கிறார். 

பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் நாளை நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ளார். தற்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதையொட்டி, நாடாளுமன்ற மையப் பகுதியில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், நிறைவுரையாற்றிய பிரணாப் நாடாளுமன்றம் மற்றும் குடியரசின் சிறப்பு தொடர்பான பல்லேறு அம்சங்கள் குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட புத்தகத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரணாப்பிடம் நினைவுப்பரிசாக வழங்கினார். 

இதையடுத்து, ராம்நாத் கோவிந்த் இன்று  பதவியேற்க உள்ளதால் தற்போதிலிருந்தே, அவருக்கு குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பதவியேற்பு விழாவில் பிரதமர்.நரேந்திர மோடி, தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.

தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்னிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios