நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு பதிலாக, நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நியமித்தார். 

அதுபோல், திக்விஜய் சிங்கை நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராக வெங்கையா நாயுடு நியமித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ்  மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தானில் இருந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து  ராஜ்யசபா, எம்.பி.,யாக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.