காஷ்மீரை டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுடன் இணைக்கும் வகையில் அங்கு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் என அந்ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் காஷ்மீரில் வளர்ச்சிப்பணிகள் வெகமெடுக்க தொடங்கியுள்ளது. 

370வது சிறப்பு சட்டத்தை மத்திய அரசு  நீக்கியபோது  கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது, காஷ்மீரை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவே சிறப்பு சட்டம் நீக்கப்பட்டுள்ளது எனவும், 70 நாட்களுக்குள் காஷ்மீரின் வளர்ச்சி அபரிவிதமாக மாறப்போகிறது என்று பிரதமர்மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அகியோர்  எதிர்கட்சிகளுக்கு ஆவேசமாக பதில் அளித்திருந்தனர். இந்த நிலையில் காஷ்மீரை மற்ற மாநிலங்களுக்கு இணையாக வளர்த்தெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக காஷ்மீரில் உள்ள 50 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக அரசு வேலை என்று அறிவித்திருந்த நிலையில், டெல்லி-மும்பை போன்ற பெருநகரங்களுடன் காஷ்மீரை இணைக்கும் வகையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் சுமார் 25 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கப்படும் என ஸ்ரீநகர் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 இதற்கான கட்டுமானப்பணிகள் 2 கட்டங்களாக நடைபெறும் என்றும் .  இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள அவை காரிடார் -1 மற்றும் காரிடார் -2 என திட்டங்கள் அமைய உள்ளது என்றும் கூறியுள்ளது. ஒரு பகுதிக்கு 12 நிலையங்கள் அதாவது, இரண்டு பகுதிகளும் சேர்த்து மொத்தம் 24 நிலையங்களுடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு அதற்கான முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.