தமிழகத்தில் எப்படியாவது காலூண்றிவிட வேண்டும் என்று பாஜக தலைகீழாக முயன்று வருகிறது. ஆனால் இது வரை அது கைகூடி வரவில்லை. கடந்த மக்களைத் தேர்தலில் அதிமுகஇ பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் எதுவும் தேறவில்லை.

இதையடுத்து  அண்மையில் தமிழகம் வந்த அமித்ஷாஇ தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவினருக்கு சில முக்கிய அசைன்மெண்ட்டுகளை கொடுத்துள்ளார்.

பாஜகவுக்கு தாங்கள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறோமோ இல்லையோ திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதையடுத்து அதிமுக, ரஜினியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என பாஜக முடிவு செய்துள்ளது.

இதற்கு எப்படியும் ரஜினியை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்றும் அதற்கான வேலைகளை தான் முடுக்கிவிட உள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


அது மட்டுமல்லாமல் திமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஸ்டாலினின் அண்ணன்  மு.க.அழகிரியையும் களத்தில் இறக்க அமித்ஷா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அழகிரி முழு சம்மதம் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது .

இந்த வலுவான கூட்டணி நிச்சயமாக வெற்றியைத் தரும் என அமித்ஷா நம்புவதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம் குறித்து ஸ்மெல் பண்ணிய திமுக அவசர அவசரமாக புதிய வியூகங்களை அமைக்கத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.