எனது குடும்பத்தில் யாரவது அரசியலுக்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள், வாய்ப்பு கிடைத்தால் தலித் ஒருவரையே முதல்வர் ஆக்குவோம், காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை, அதிமுக, திமுகவை வேரோடும், வேறடி மண்ணோடும் அழிக்கணும், ஒழிக்கணும்.

47 வருடங்களாக தமிழகத்தை பிடித்த சனியன்கள் இவர்கள். காமராஜர் வார்த்தையில் சொன்னால் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். காமராஜர் இரண்டு மட்டைகள் பற்றி சொன்னார். ஆனால், தற்போது நிறைய மட்டைகள் விழுந்துள்ளன. இந்த நாசகார சக்திகளை ஒழிக்க திட்டமிட்டு வருகிறோம்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாக அறிக்கை விட்டார் ராமதாஸ் இன்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது சமூக வலைதளங்களில் ராமதாஸின் பழைய டுவீட்களையும், அவர் பலமுறை சொன்னதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு கலாய்த்து வருகின்றனர்.