வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது குறித்து, ஹெச்.ராஜா ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்கு மாநிலம் அக்னி மூலை என்றும் பெரியார் நெருப்பு உங்களை எரித்துவிடும் என்றும் நெட்டிசன் ஒருவர் கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. திரிபுராவில் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போது, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகிறது. 

வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஹெச்.ராஜா தனது டுவிட்டரில், வடகிழக்கு என்பது ஈசான் மூலை. ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்க வேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான் என்று பதிவிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த டுவிட்டர் பதிவுக்கு, நெட்டிசன் ஒருவர், வடகிழக்கு மாநிலங்கள் ஈசான்ய மூலை தான்! ஆனால், தென்கிழக்கு மாநிலம் அக்னி மூலை! பெரியார் நெருப்பு! உங்களை எரிச்சிடும். ஸ்கெளட் தேர்தலில் அசிங்கப்பட்டு, ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவிடம் வீழ்ந்த கதையை இன்னும் மறக்கவில்லையா? என்று கூறியுள்ளார்.