புலி, சிங்கம், கரடி என அனைத்தையும் பார்த்த தாம், நண்டுக்கு பயப்படப்போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, டிஸ்கவரி சேனல்ல வர்ற பியர் கிரில்ஸ்-கே இவரு டஃப் கொடுப்பாரு போல என்றும், நண்டுக்கு பதில் பாம்பை விட்டாத்தான் பயப்படுவாரு போல என்றும் நெட்டிசன்கள் பலவாறு கலாய்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கடல் அரிப்பால் வீடுகளை இழந்தும், கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட முயன்றதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு வந்த பெண் ஒருவர் தான் பையில் வைதிருந்த நண்டுகளை எடுத்து வீட்டில் விட முயன்றார். இதனைப் பார்த்த பாதுகாப்பு போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.

கடல் அரிப்பால் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலர் வீடுகளை இழந்தனர். கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

எங்களின் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் நண்டு விடும் போராட்டம் நடத்துவோம் என்று மீனவர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், நர்மதா என்ற பெண் இன்று ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது புலி, சிங்கம், கரடி என அனைத்தையும் சந்தித்து வந்த தாம், நண்டுக்கு பயப்படப் போவதில்லை என்று கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறிய இந்த கருத்துக்கு, நெட்டிசன்கள் பலவாறு கிண்டல் செய்து சமூக வளைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சிங்கம் புலி எல்லாம் பார்த்திட்டுதான் அரசியலில் வந்துள்ள இவர், ஜூல வேலை பார்த்திருப்பாரோ என்றும்,

ஒருவேலை பாம்பை விட்டாத்தான் பயப்படுவாரோ;

ஒருவேளை இவர் ஜெமினி சர்கஸ்-ல வேலை பார்த்து இருப்பாரோ...

டிஸ்கவரி சேனல்-ல வர்ற பியர் கிரில்ஸ்-கே இவரு டஃப் கொடுப்பாரு போல என்று நெட்டிசன்கள் பலவாறு கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.