Asianet News TamilAsianet News Tamil

குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை ஏன் சேர்க்கவில்லை..? பாஜகவில் உள்ள நேதாஜியின் பேரன் அதிரடி கேள்வி!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்தவரே இந்தக் கேள்வியை எழுப்பியிருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆதரவு பேரணி நடத்தினார். இந்நிலையில் சந்திரகுமார் போஸ் இந்தக் கேள்வியை எழுப்பியிள்ளார். 

Nethaji garand son Chandrakumar bose question about caa
Author
Kolkata, First Published Dec 25, 2019, 9:33 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நேதாஜியின் பேரனும் மேற்கு வங்க பாஜக துணைத் தலைவருமான சந்திரகுமார் போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.Nethaji garand son Chandrakumar bose question about caa
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை; தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் பற்றி வழிகாட்டு விதிமுறைகள் ஏதும் உருவாக்கப்படவில்லை என்று பாஜக கூறினாலும், போராட்டங்கள் ஓயவில்லை. எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி போராட்டங்களை நடத்திவருகின்றன.Nethaji garand son Chandrakumar bose question about caa
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மேற்கு வங்கம் பாஜக துணை தலைவரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “குடியுரிமை திருத்த சட்டம் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல என்றால், இந்து, சீக்கியர், கிறிஸ்துவர் என குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் இதில் ஏன் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஏன் இஸ்லாமியர்களைச் சேர்க்கக் கூடாது? அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Nethaji garand son Chandrakumar bose question about caa
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்தவரே இந்தக் கேள்வியை எழுப்பியிருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆதரவு பேரணி நடத்தினார். இந்நிலையில் சந்திரகுமார் போஸ் இந்தக் கேள்வியை எழுப்பியிள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios