நாளை மறுநாள் நடைபெற உள்ள புதுவையின் நெல்லித்தோப்பு சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 32,000 வாக்காளர்களை கொண்டதாகும். அடிப்படையில் காங்கிரஸ் வாக்காளர்க்ள அதிகம் கொண்ட இந்த தொகுதியில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

நாராயணசாமிக்காக ராஜினாமா செய்த ஜான்குமார் மீனவர்கள் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், ராகுல்காந்தியே ஜான்குமாரிடம் நேரடியாக தொலைப்பேசியில் பேசியதாலும், ஆரம்பம் முதலே காங்கிரஸ் தரப்பில் பணிகள் சூடுபிடிக்க தொடங்கின.

அதுமட்டுமின்றி, தான் முதலமைச்சர் ஆன நாளிலிருந்தே கடந்த 3 மாதங்களாக நாராயணசாமி நெல்லித்தோப்பை குறிவைத்து பல வேலைகளை செய்துவிட்டார்.

அந்த விஷயங்கள் தற்போது நாராயணசாமிக்கு தற்போது கைகொடுத்துள்ளன. இது தவிர்த்து திமுக மற்றும் தொகுதியில் உள்ள சுமார் 10,000 தலித் ஓட்டுக்கள் விடுதலை சிறுத்தைகள் மூலமாக கைக்கு கை கொடுக்கிறது.

எதிர் தரப்பிலோ அதிமுக ஒரு பக்கமாகவும், அதற்கு ஆதரவு கொடுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஒரு பக்கமும், மற்றொரு ஆதரவாளரான பாஜக என ஆளுக்கு ஒரு பக்கம் ஓட்டு கேட்டதால் சக்தி வாய்ந்த நாராயணசாமியை எதிர்க்கும் அளவிற்கு அதிமுகவினரால் நெல்லித்தோப்பு தொகுதியில் பலம் வாய்ந்த கட்சியாக மாறமுடியவில்லை.

இந்தநிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளில் மொத்தமுள்ள ஓட்டுகளில் சுமார் 70 சதவிகிதத்திற்கு மேல் நாராயணசாமி வெற்றி பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.