கடந்த செப்டம்பர் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக மிக ஆபத்தான கட்டத்தை அடுத்து உடல் நலம் உயிர் பிழைத்தார்.

 

பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன்  காமராசர், கண்ணதாசன் உள்ளிட்ட 1970களில் தொடங்கி  முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன். இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் உயர் மட்டக்குழு உறுப்பினராக இருந்து சில மாதங்களுக்கு முன் விலகினார். திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ள சுகா கமல் நடித்த பாபநாசம் படத்தின் வசன கர்த்தாவும் கூட. அசுரன் படத்தின் வசன உச்சரிப்புகளை சொல்லிக் கொடுத்து அந்தப்படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக தீவிரச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் நெல்லை கண்ணன். ’’26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனே கேலக்ஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அப்போது அவர், ‘’மிக மிக ஆபத்தான நிலை அனைவருமே அழ அரம்பித்து விட்டனர்.  எங்கள் ஊர் பிரபல மருத்துவர்கள் அனைவரும் சொல்லுவதே உண்மையாயிற்று.

என் அன்னை காந்திமதி தன் பிள்ளையை இழக்கச் சம்மதிக்கவில்லை. இன்னும் இரண்டு நாள் இருந்து விட்டுச் செல்ல வேண்டும் என மருத்துவர் சுபானி கடிந்து கொண்டார். நான் இன்று கோயம்புத்தூரில் இருக்க வேண்டுமே. மிகச் சிறந்த இருதய மருத்துவ நண்பர் தமிழிலேயே உரையாடல்கள் அனைத்தையும் நடத்துகின்றார். அவர் தமிழுக்காகவும் அன்பிற்காகவுமே அவரை இனி அடிக்கடிச் சந்திக்கப் போவேன்’’என்று தாம் குணமடைந்ததை தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் மோடி, அமித்ஷாவை  பற்றி வயதான காலத்தில் அவதூறாக பேசி மனநெருக்கடிக்கு தன்னை ஆளாக்கிக் கொண்டுள்ளார் நெல்லை கண்ணன். அவர் கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ள நிலையில், மீண்டும் உடல் நலம் குறிய அவர் அவசர அவசரமாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஏற்கெனவே மறுபிறவி எடுத்து வந்த நெல்லை கண்ணனுக்கு என்னவாகுமோ என அவரது குடும்பத்தினர் இப்போது அழுது தவித்து வருகின்றனர்.