negative propaganda in mersel film push to file a case against vijay said thamizisai
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் அரசியல் ரீதியான வசனங்கள் பல இடம்பெற்றிருப்பதாக, முதல் நாள் படம் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர், மெர்சலில் கூறப்படும் சில வசனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டனர் பலர். படத்தில், ஜிஎஸ்டி., வரி விகிதம் குறித்த விவாதம் எழுப்பப் பட்டுள்ளதாகவும், ஆனால் அவை தவறான தகவல்களை முன்னிலைப் படுத்துவதாகவும் புகார்களைக் கூறி வருகின்றனர் படம் பார்த்தவர்கள், குறிப்பாக பாஜகவினர்! சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர்கள், இன்னாங்கடா ஃபிலிமு காட்டுறீங்க... என்று விஜய்க்கு குட்டு வைக்கிறார்கள்!
இதனிடையே இன்று சென்னை திருவொற்றியூரில் நில வேம்பு குடிநீர் வழங்கிய பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மெர்சல் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழிசை, மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா இவற்றைக் குறித்து தவறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை நீக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அரசியலுக்கு தான் வரவேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்று குமுறினார்.
