Asianet News TamilAsianet News Tamil

#BREAKING நீட் தேர்வு, டாஸ்மாக் போராட்ட வழக்குகள் ரத்து.. முதல்வர் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!

நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும், ஆக மொத்தம் 868 வழக்குகளைத் திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணையிட்டுள்ளார்.

neet tasmac protest cases cancel...CM Stalin Announcement
Author
Chennai, First Published Sep 27, 2021, 2:58 PM IST

நீட் தேர்வுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும்  போராடியவர்கள் மீது  தொடரப்பட்ட 868 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில்;- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.6.2021 அன்று சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்துக்கு அளித்த பதிலுரையில் 'கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் - நியூட்ரினோ - கூடங்குளம் அணு உலை - சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும்' என்று அறிவித்திருந்தார்.

neet tasmac protest cases cancel...CM Stalin Announcement

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, 5,570 வழக்குகள் ஏற்கெனவே திரும்ப பெறப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கடந்த 13-9-2021 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், 'நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனவும் அறிவித்திருந்தார்.

neet tasmac protest cases cancel...CM Stalin Announcement

அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும், ஆக மொத்தம் 868 வழக்குகளைத் திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணையிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios