Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வால் பாதிப்பு... அடித்துச் சொல்லும் ஓய்வு பெற்ற நீதிபதி..!

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரித்து அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
 

Need to be affected by the exam ... Retired judge to beat ..!
Author
Tamil Nadu, First Published Jun 14, 2021, 3:07 PM IST

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரித்து அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Need to be affected by the exam ... Retired judge to beat ..!

இந்தக் குழுவின் உறுப்பினர்கள் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சட்டத்துறை செயலர் கோபி ரவிகுமார், பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, சமூக சமத்துவத்துகான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.ஜே.ராஜன், ”நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது. அது குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளோம். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரின் கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது என்பதுதான்.Need to be affected by the exam ... Retired judge to beat ..!

அரசு அறிக்கையை ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதா இல்லையா? என்பதை குறித்து இறுதிகட்ட அறிக்கையில் கூறப்படும். அடுத்த கூட்டம் திங்கள் கிழமை கூடும் அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios