தமிழகத்தில் புதிதாக பெண் விடுதலை என்ற அரசியல் கட்சியை ஆசிரியை சபரிமாலா இன்று துவக்கினார்.


  அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு பின் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்தது. அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக மாணவர் போராட்டங்கள் நடத்தினார்கள்.ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியையான சபரிமாலாவும் தனது 7 வயது மகனுடன் போராடினார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  சபரிமாலா தனது அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு பெண்களுக்கான உரிமைக்கு போராடி வந்தவர் பெண் விடுதலை கட்சி என்று ஒன்றை தொடங்கியிருக்கிறார் சபரிமாலா.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, நீட் தேர்வுக்கு எதிராக புரட்சியை உருவாக்குவது. ஒற்றை கல்வி முறை, கிராமங்கள் தோறும் கட்டாய கழிப்பறை உள்ளிட்ட 15 கொள்கைகளை முன்னிறுத்தி பெண் விடுதலை என்ற புதிய அரசியல் கட்சியை தமிழகத்தில் தொடங்கியிருக்கிறர் ஆசிரியை சபரிமாலா.

 பெண் விடுதலை கட்சியின் அறிமுக விழா  நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அப்போது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி ஆசிரியை சபரிமாலா பேசிய போது...

"இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நிகழ்வதால், தன் ஆசிரியர் பணியை துறந்து பெண்விடுதலை கட்சியை தொடங்கி இருக்கிறேன். மேலும் ஆளுமையான கட்சிகளுடன் போட்டி போடுவதற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல இது. பெண் பாதுகாப்புக்காகவே பெண் விடுதலை என்ற பெயரில் தொடங்கப்பட்ட தன் கட்சிக்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகி வருகிறது. பெண்களை மதிக்கும் ஆண்களுக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் தலைமுறை மாற்றத்திற்காகவும் தொடங்கப்பட்டதுதான் பெண் விடுதலை கட்சி என்றார்.