அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அமித்ஷா முன்னிலையில், நயினார் நாகேந்திரன் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணி என பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பாஜக பின்னணியில் செயல்பட்டதாக செய்திகள் வெளியாகின. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு பாஜக
பின்னணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜாகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அமித்ஷா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோர், அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், இன்று பாஜாகவில் சேர்ந்துள்ளார். தமிழகத்தில் பாஜகவை
வலுப்படுத்தும் நோக்கில், பாஜக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.