ஐடி ரெய்டுக்கு பிறகு நெய்வேலி படப்பிடிப்பில் இருந்த விஜய் தனது ரசிகர்களை வரவழைத்து வேன் மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்தப்புகைப்படங்கள் வைரலாகப் பரவியது.

 

இந்தப்புகைப்படத்தை பரவலாக்கிய விஜய் மக்கள் மன்றத்தினர், ’பார்த்தீர்களா எங்கள் தளபதியின் மாஸை..?’எனக் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், இதுவெல்லாம் ஒரு கூட்டமா? நடிகைகளுக்கு கூடிய கூட்டத்தை விட மிகக் குறைவு என எதிர்த்தரப்பினர் எள்ளி நகையாடினர். கொச்சியில் ஆபாச நடிகை சன்னி லியோனை காண வந்த கூட்டத்தில் ஒரு பாதி கூட இல்லை. சமந்தாவை தரிசிக்க வந்த கூட்டத்தில் பாதிகூட இல்லை. ஓவியாவை பார்க்க வந்த கூட்டத்தைவிட ரொம்ப கம்மி என பதிலடி கொடுத்து வந்தனர். 

இந்தக் கோதாவில் நடிகை நயன்தாராவையும், விஜய்க்கு எதிராக கோதாவில் இறக்கி விட்டுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு சேலத்தில் நடிகை நயன்தாரா நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றார். எப்போதும் இல்லாத அளவிற்கு அரசியல்வாதிகளின் கூட்டத்திற்கு கூடாத பெரும் கூட்டம் கூடியது. கூட்டத்தை தாண்டி நயன்தாராவின் கார் கடந்து செல்ல முடியவில்லை. ஓமலூர் சாலையே ஸ்தம்பித்தது. அந்தக் கூட்டத்தை ஒப்பிட்டு எங்கள் தலைவி நயன்தாராவை விட விஜய்க்கு மாஸ் குறைவு தான் என பதிவிட்டு வருகின்றனர். 

’விஜய் செல்ஃபிக்கு மக்கள் ஆதரவாம். அதனால் அவர் கட்சி ஆரம்பித்தால் வெற்றி உறுதியாம் - பொற்காசு மீடியா. அந்த வகையில் த்ரிஷா, நயன்தாரா, சன்னி லீயோன் வரும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது. அவர்கள் மந்திரிகள் ஆகி விடுவார்களா - பொது ஜனம்’’ என்றும் தலைவி இருக்கிறாள் தயங்காதே நயன்தாரா என நயன்தாராவை புகழ்ந்து வருகிறது ஒரு கூட்டம். போகிற போக்கைப்பார்த்தால் நயன்தாராவையும் அரசியல் களத்தில் இறக்கி விட்டு தமிழகத்தில் காவடி தூக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பின்னே... கட்சி ஆரம்பித்தபோது தீபா பின்னால் சென்றவர்களே இருக்கும்போது நயன்தாரா அழைத்தால் மறுப்பார்களா நம்மவர்கள்... இப்போதே தலைவி என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.