Asianet News TamilAsianet News Tamil

“விரைவில் நல்ல செய்தி வரும்” – நவநீதகிருஷ்ணன் நம்பிக்கை

navaneethakirushnan byte-XB9YWL
Author
First Published Feb 10, 2017, 7:28 PM IST


முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர், அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மதுசூதனன் நீக்கப்படுவதாக வி.கே.சசிகலா உத்தரவிட்டார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் கூட்டாக இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர்.

navaneethakirushnan byte-XB9YWLஅப்போது பேசிய மதுசூதனன், அதிமுக பொதுசெயலாளர் பதவிலிருந்து சசிகலாவை தான் நீக்குவதாக அதிரடியாக தெரிவித்தார்.

மேலும் தற்காலிக பொதுச்செயலாளர் என்பது அதிமுக வரலாற்றிலே கிடையாது எனவும், பொதுசெயலாளர் பதவிக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

யார் பொதுச்செயலாளர்கள் என்ற முடிவை அடிமட்ட தொண்டர்களே எடுப்பார்கள் எனவும் அதற்கான தேதி விரைவில் வெளியிடபடும் எனவும் கூறினார்.

இந்நிலையில் போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் கூறியதாவது:

கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சசிகலாவுக்கு உரிமை உண்டு .

சசிகலா எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் கட்சி விதிகளுக்கு உட்பட்டது.  

மீண்டும் பொதுக்குழு கூட்டம், தேர்தல் என கூறுவது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios