வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இன்று தலைமைச்செயலகத்தில் அலோசனை நடத்திய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வரும் நவம்பர் 25ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

 

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது.  பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ, வரும் நவம்பர் 18 ஆம் தேதிவரை வாக்களர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். நவம்பர் 25  வரைவு வக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் 2020 ஜன 20 ம் தேதி முழு வக்காளர் பட்டியல் வெளியடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுவரை 1.64 லட்சம் பேர் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மனு அளித்துள்ளனர் என்ற அவர், வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு இருந்தால் வாக்காளர்களே முன்வந்து  நீக்க வேண்டும். என கேட்டுக்கொண்டார். வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகவும் அது தொடர்பாக விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.