Asianet News TamilAsianet News Tamil

21 வயது பெண்ணின் உலுக்கியெடுத்த ஒற்றை வீடியோ... ஓடோடிச் சென்று நெகிழ வைத்த அமைச்சர்..!

நான் என் இதயத்திலிருந்து பேசினேன். நாங்களும் மனிதர்கள், எங்களையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்" என்று அஷ்வினி கூறினார்.

narikuravar women made a point and a minister sekar babu had lunch with her
Author
Tamil Nadu, First Published Nov 2, 2021, 6:13 PM IST

சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கடற்கரை கோயிலுக்கு அருகில் வசிக்கும் நாடோடி இனமான நரிகுரவர் சமூகத்தின் புதிய முகமான 21 வயதான அஷ்வினியை அந்த சமூகத்தினர் கொண்டாடுகிறார்கள்.narikuravar women made a point and a minister sekar babu had lunch with her

அஸ்வினி தனது சமூக உறுப்பினர்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீடியோவில் தனது கோபத்தை வெளிப்படுத்திய பின்னர் வெளியே தெரிய வந்தார். அந்த வீடியோ வைரலானது. அடக்கி வைத்திருந்த பல வருட அவமானத்தை வீடியோவில் கோபமாக கொட்டித் தீர்த்து விட்டார். இது அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் கவனத்தை ஈர்த்தது. அவர் வெள்ளிக்கிழமை அஷ்வினியை அழைத்து அவருடன் உணவு பகிர்ந்து கொண்டார்.

"கோவிலில் அன்னதானத்தின் போது (இலவச உணவு வழங்குதல்) உணவு மறுக்கப்படுவது பற்றி அதிகம் கவலை இல்லை. உணவை வழங்கிய கோவில் ஊழியர்கள் எங்களை நடத்திய விதம் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நான் என் இதயத்திலிருந்து பேசினேன். நாங்களும் மனிதர்கள், எங்களையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்" என்று அஷ்வினி கூறினார்.narikuravar women made a point and a minister sekar babu had lunch with her

மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரியில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 68 நரிக்குறவர் குடும்பங்கள் குடியேறினர். பிரபலமான சுற்றுலா தலமான மாமல்லபுரம் கோவிலுக்கு அருகே கடற்கரையோரம் மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

பூஞ்சேரியில் இவர்களுக்கு அரசு சார்பற்ற நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் வீடுகள் கட்டி கொடுத்து நரிக்குறவர் கிராமம் என்று பெயரிட்டனர். குடிநீர், அணுகுசாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்காக சமூகம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
அது குறித்தும் அந்த வீடியோவில் பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலானவுடன், அதிகாரிகள் அஷ்வினியை அணுகினர்.

 “அமைச்சர் (பி.கே. சேகர் பாபு) என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். அவர் என்னை ‘சகோதிரி’என்று அழைத்து, சில நாட்களுக்கு முன்பு அன்னதானம் மறுக்கப்பட்ட கோயிலில் எங்களுடன் உணவு அருந்தினார். அவர் எங்களை மரியாதையுடன் நடத்தினார் " என்றார் அஸ்வினி.

கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, முதல்வர் ஸ்டாலின் ஐயாவை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அமைச்சர் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்தார்.narikuravar women made a point and a minister sekar babu had lunch with her

அஸ்வினியின் சகோதரி கீர்த்திகா, "என் சகோதரியை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது வார்த்தைகள் அரசின் கவனத்தை ஈர்த்தது. கலெக்டர் மற்றும் பிற அதிகாரிகளை எங்கள் கிராமத்திற்கு கொண்டு வந்தது," என்கிறார் அஸ்வினியின் சகோதரி கீர்த்திகா.

 அவர்களுக்கு பட்டா (நிலப்பத்திரம்) மற்றும் வீடுகள் வழங்குவதாக செங்கல்பட்டு கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் உறுதியளித்துள்ளார். அரசு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடற்ற குடும்பங்களுக்கு, பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்கும் அரசு பேருந்துகள் அவர்களுக்காக நிற்கவில்லை என்பதை அஸ்வினி நினைவு கூர்ந்தார். இது போக்குவரத்து மற்றும் குடிமை வசதிகளின் பற்றாக்குறை மட்டுமல்ல. "எங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்கவும், கண்ணியமாகவும்,  வாழ வேண்டும். வளர வாய்ப்புகள் தேவை. ஆனால் ஆசிரியர்கள் எங்கள் குழந்தைகளை அலட்சியமாக நடத்துகிறார்கள். ஏன் படிக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்கிறார்கள். 

இதனால், பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல விரும்புவதில்லை. அவர்களின் அலட்சிய மனப்பான்மையால், அவர்கள் எங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவ வேண்டும்," என்றார் அஸ்வினி

Follow Us:
Download App:
  • android
  • ios