முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள பீஹாரில், பல்வேறு அரசு திட்டப் பணிகள் தொடக்க விழா, நேற்று நடைபெற்றது. 

இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி , ஜம்மு - காஷ்மீரில் நடந்த கோர தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்; நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அவர்களது குடும்பத்தாருக்கு, நாட்டு மக்களின் சார்பில் இரங்கலை தெரிவிக்கிறேன்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், நாட்டு மக்களின் மனதில், கோபக் கனலை ஏற்படுத்தியுள்ளது; அது, என் மனதிலும் தீயாக பற்றி எரிகிறது.

இந்த தாக்குதலுக்கு சரியான பரிகாரம் விரைவில் தேடப்படும். நம் படைகள் சரியான பதிலடியைக் கொடுக்கும் என்ற அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக, மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக எடுத்து வரும் நடவடிக்கைகளால், அண்டை நாடான பாகிஸ்தான் விரக்தியில் இருந்துள்ளது என தெரிவித்தார். 

அதன் வெளிப்பாடே, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்து உள்ள தாக்குதல்; இதற்கு தகுந்த பதிலடியை நாம் கொடுப்போம் என மோடி கூறினார்.